திருமண பந்தியில் தீர்ந்து போனதால் ஆவேசம்: குலோப் ஜாமூனுக்காக நடந்த கொலை

திருமண பந்தியில் தீர்ந்து போனதால் ஆவேசம்: குலோப் ஜாமூனுக்காக  நடந்த கொலை

திருமண பந்தியில் குலோப் ஜாமூன் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் மொகல்லா ஷைக்காலைச் சேர்ந்தவர் உஸ்மான். இவரது மகள்கள் திருமணம் விநாயக் பவனில் நேற்று நடைபெற்து. அப்போது திருமண விருந்தில் குலாப் ஜாமூன் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனால் மணமகன் மற்றும் மணமகள் வீட்டாரின் உறவினர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது திடீரென மோதலாக மாறியது. இதற்கிடையில் இந்த மோதலின் போது ஒருவர் திடீரென கத்தியால் குத்தியதில் பலர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த எட்மத்பூர் போலீஸார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆக்ராவில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சன்னி என்பவரின் மகன் கலீல் (22) பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "குலோப் ஜாமூன் தட்டுப்பாடால் ஏற்பட்ட தகராறு பெரும் மோதலாக மாறியுள்ளது. இரு வீட்டாரைச் சேர்ந்த உறவினர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஒருவர் கத்தியால் குத்தியதில் 22 வயது வாலிபர் உயிரிழந்தார். அத்துடன் தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர். திருமண வீட்டில் குலோப் ஜாமூன் தட்டுப்பாட்டால் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆக்ராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in