தக்காளி விலை மேலும் உயர்வு... இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி!

தக்காளி
தக்காளிதக்காளி விலை உயர்வு

சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது இல்லத்தரசிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

ஏழைகளின் ஆப்பிள் என்று கொண்டாடப்படும் தக்காளியின் விலை, ஆப்பிள் விலையைத் தொட்டு நிற்கிறது என்று இன்று காலை சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் காய்கறி வாங்க வந்தவர்கள் புலம்பிச் சென்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. தக்காளி விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

பருவ மழை அதிகரித்ததன் காரணமாக பல மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் தக்காளி விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், தக்காளி, இஞ்சி உட்பட காய்கறிகளை விலை கணிசமாக உயர்ந்துள்ளதற்கு டீசல் விலை உயர்வே காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக டீசல் விலை குறையவே இல்லை. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை அதிகபட்சமாக 150 ரூபாய் வரை உயர்ந்தது. வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 180 ரூபாய் வரை விற்பனைச் செய்யப்பட்டது.

பின்னர், கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை குறைந்து விற்பனைச் செய்யப்பட்ட நிலையில், கடந்த 25-ம் தேதி கிலோவுக்கு 10 ரூபாயும், 26-ம் தேதி கிலோவுக்கு 20 ரூபாயும் உயர்ந்து இருந்தது. நேற்று ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு மேலும்10 ரூபாய் உயர்ந்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதல் ரகம் தக்காளி கிலோ 150 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் 140 ரூபாய்க்கும், 3-ம் ரகம் 130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் தக்காளி விலை 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் தக்காளி இல்லாத சமையலுக்கு மாறி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in