அன்றே எச்சரித்த இறையன்பு : விபரீதத்தில் முடிந்த மழைநீர் வடிகால் பணி

அன்றே எச்சரித்த இறையன்பு : விபரீதத்தில் முடிந்த மழைநீர் வடிகால் பணி

மழைநீர் வடிகால் பணி நடைபெறும் இடத்தில் கால் இடறி ஒருவர் இன்று உயிரிழந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறும் வெள்ளத் தடுப்புப் பணிகளைத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு கடந்த ஒருவாரத்திற்கு முன்பாக ஆய்வு செய்தார்.

மாங்காடு பகுதியில் ஆய்வு செய்த இறையன்பு, “பணிகள் முடிவு பெறாமல் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு, மக்களிடமிருந்து புகார்கள் ஏதேனும் வந்தால் இதற்குக் காரணமான அனைத்து அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்" எனத் தெரிவித்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்பு எச்சரித்தது போல அப்பகுதியில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

மாங்காடு பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர் லட்சுமிபதி(42). இவர் இன்று காலை அப்பகுதி வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது கால் இடறி மழைநீர் வடிகால் பணி நடைபெறும் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். இவரின் உடலைக் கைப்பற்றி மாங்காடு போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். வெள்ளத் தடுப்பு பணிகளில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in