45 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: இலங்கைக்கு தொடர்ந்து கடத்தப்படும் பின்னணி என்ன?

45 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: இலங்கைக்கு தொடர்ந்து கடத்தப்படும் பின்னணி என்ன?

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஒன்றரை டன் பீடி இலைகளைக் க்யூ பிரிவு போலீஸார் இன்று பறிமுதல் செய்தனர்.

கடல் வழியாக தமிழகத்தின் தூத்துக்குடி, ராமேஸ்வரம் பகுதிகளில் இருந்து பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடலோரக் காவல்படையினர் அடிக்கடி கடலுக்குள் திடீர் ரோந்து சென்று பீடி இலைகளைக் கைப்பற்றுவதும், மீனவர்கள் சிக்குவதும் அண்மைக்காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையிலான போலீஸார் பழையகாயல் புல்லாவெளி கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு ஒரு லாரி நின்று கொண்டு இருந்தது. அதில் டிரைவர் இல்லை. லாரி லோடு நிரப்பப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த க்யூ பிரிவு போலீஸார் லாரியை சோதனை செய்து பார்த்தபோது அதில் ஒன்றரை டன் பீடி இலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மர்மநபர்கள் அதை மீனவர்களின் விசைப்படகுகளின் மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. பீடி இலையின் மதிப்பு 45 லட்சம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் ஒரு கிலோ பீடி இலையின் சந்தை மதிப்பு 500 ரூபாய் தான். அதற்கு இலங்கை மதிப்பு 3000 ரூபாய். ஒன்றுக்கு, ஆறுமடங்கு விலை இருப்பதால் தான் இலங்கைக்கு தொடர்ந்து பீடி இலை கடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in