சுங்கச்சாவடி கட்டணம் உயர்வால் லாரி தொழிலுக்கு மூடுவிழா: எச்சரிக்கும் சம்மேளன தலைவர்

லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின்  தமிழ்நாடு தலைவர் ராஜ்
லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தமிழ்நாடு தலைவர் ராஜ்சுங்கச்சாவடி கட்டணம் உயர்வால் லாரி தொழிலுக்கு மூடுவிழா: எச்சரிக்கும் சம்மேளன தலைவர்

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வால் 4.5 லட்சம் லாரிகளும், 50 லட்சம் தொழிலாளர்களும்  பாதிக்கப்படுவார்கள் என  லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். 

நாடு முழுவதும் ஏப்.1-ம் தேதி முதல் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனால் லாரி உரிமையாளர்கள் மட்டும் அதனை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என  அவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின்  தமிழ்நாடு தலைவர் ராஜ் கூறுகையில், " தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் வாடகைக்கு இயக்கப்படுகின்றன. சுங்கச் சாவடி கட்டணம் உயர்த்திக்கொண்டே சென்றால் இத்தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டு இதனை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தும் முறை வேண்டும். 

இதை வலியுறுத்தித்தான் பல்வேறு சங்கங்கள் போராடி வருகிறோம். தற்போது ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட உள்ள சுங்கச்சாவடி கட்டண முடிவை நிறுத்தி வைக்க வேண்டும். ஏற்கெனவே 4.5 லாரிகளில் 1 லட்சம் லாரிகள் தவணைக் கட்ட முடியாமல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 50 ஆயிரம் லாரிகள் காயலான் கடைக்குச் சென்றுவிட்டன. தற்போது சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டாலும் கூட வாடகை கட்டணம் உயர்த்த முடியாது. மக்களால் அந்த வாடகையை கொடுக்க முடியாது. லாரி தொழிலுக்கு மூடு விழா தான் நடத்த வேண்டும்.

இதனால் லாரி தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் எலெக்ட்ரிசியன், பெயின்டர், பாடி கட்டுவோர், மெக்கானிக், உரிமையாளர்கள், ஒட்டுநர்கள், கிளீனர்கள் என 50 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். எனவே, சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in