காங்கிரஸ் எம்.பியின் ஓன்றரை லட்ச ரூபாய் பேனா திருட்டு!

காங்கிரஸ் எம்.பியின் ஓன்றரை லட்ச ரூபாய் பேனா திருட்டு!

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி.விஜய் வசந்தின் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பேனா திருட்டுப் போனதாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பியான விஜய வசந்தகுமார் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கிண்டியில் உள்ள பிரபலமான தனியார் ஓட்டலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் இருந்த ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த பேனாவை மர்மநபர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த எம்.பி தனது விலை உயர்ந்த பேனா திருடு போனது குறித்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் கிண்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in