நோயாளிகள் இன்று மருத்துவமனைக்கு வரவேண்டாம்: ஹோலியால் ஜிப்மர் மருத்துவமனைக்கு லீவு

ஜிப்மர் மருத்துவமனை
ஜிப்மர் மருத்துவமனை நோயாளிகள் இன்று மருத்துவமனைக்கு வரவேண்டாம்: ஹோலியால் ஜிப்மர் மருத்துவமனைக்கு லீவு

ஹோலி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள்  பிரிவு  மூடப்பட்டுள்ளதால் இன்று நோயாளிகள் மருத்துவமனைக்கு  வரவேண்டாம் என்று  அந்த மருத்துவமனை நிர்வாகத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று ஜிப்மர் மருத்துவமனைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'ஹோலி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு இன்று விடுமுறை அறிவித்துள்ளது. அதனால் இன்றைய தினம் ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆனாலும், அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும்.  நாளை எப்போதும் போல்  வெளிப்புற மற்றும் புற நோயாளிகள் பிரிவு வழக்கம்போல் இயங்கும்' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in