தீபாவளிக்கு மறுநாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தீபாவளிக்கு மறுநாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளிக்கு மறுநாள் 25-ம் தேதி செவ்வாய்க்கிழமையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக  புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

எதிர்வரும்  24-ம் தேதி தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும்  கொண்டாடப்படுவதை அடுத்து  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (22-ம் தேதி) முதல் வரும் 24-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ஏற்கெனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.  

இந்த நிலையில் தீபாவளிக்கு மறுநாள் 25-ம் தேதியும் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று புதுச்சேரியில் மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று இரவு தெரிவித்துள்ளார். இதனால் மறுநாள் அறக்கப்பறக்க பள்ளிகளுக்கு கிளம்பும் பிள்ளைகளும், கல்லூரி மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in