காதலர்களே உங்களுக்கு சலுகை விலையில் புத்தகம்: காதலர் தினத்தில் வாங்கிக்கொள்ளலாம்!

 புத்தகம்
புத்தகம்காதலர் தினத்தில் புத்தகக் காதலர்களுக்கு கொண்டாட்டம்: தள்ளுபடி விலையில் புத்தகம்

காதலர் தினத்தை முன்னிட்டு புத்தகக் காதலர்கள் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை 25% தள்ளுபடியில் வாங்கிக் கொள்ளலாம் என்று எதிர் வெளியீடு பதிப்பகம் அறிவித்துள்ளது.

காதலர் தினத்தை முன்னிட்டு பசு அரவணைப்பு தினமாக கொண்டாடலாம் என்று விலங்குகள் நல வாரியத்தின் மூலமாக அறிவித்து வேடிக்கை செய்தார்கள்.  அது கடுமையான விமர்சனங்களுக்கு ஆளான நிலையில் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலடியாக என்ன செய்யலாம் என்று யோசித்து அன்றைய தினம் புத்தகங்களை வாங்குவதற்கு புத்தகக் காதலர்களை தயார் செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறது எதிர் வெளியீடு பதிப்பகம்.

அதனையடுத்து காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13 மற்றும் 14-ம் தேதிகளில் மட்டும் எதிர் வெளியீடு பதிப்பகத்தின் அனைத்து புத்தகங்களுக்கும் 25% தள்ளுபடி வழங்குகிறோம்.  புத்தகக் காதலர்கள் இணைய வழி மூலமாகவும் தங்கள் புத்தகங்களை தள்ளுபடி விலையில்  பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த பதிப்பகம் அறிவித்துள்ளது.  

வழக்கமாக புத்தாண்டு தினத்திலும், உலக புத்தக நாளிலும் மட்டுமே எதிர் வெளியீடு புத்தகங்களுக்கு தள்ளுபடி வழங்குவோம். வாசகர்கள் ஆதரவு இருக்கும் என்றால் அடுத்தடுத்த ஆண்டுகளில் காதலர் தினத்திற்கும் இதைத் தொடரலாம் எனவும் எதிர்  வெளியீடு  பதிப்பகம் தெரிவித்துள்ளது. பிறகு என்ன  அன்றைய தினம் ஆசையுடன் புத்தகங்களை அள்ளி அணைத்துக் கொள்ளுங்கள் புத்தகப் பிரியர்களே. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in