அசாமில் இருந்து மதுரை வந்த பயணி: ரயில்வே நடைமேடையில் தூக்கிட்டு தற்கொலை

அசாமில் இருந்து மதுரை வந்த பயணி: ரயில்வே நடைமேடையில் தூக்கிட்டு தற்கொலை

ரயில்வே நடைமேடையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

மதுரை ரயில் நிலையத்தின் ஆறாவது நடைமேடையில் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைக் கண்ட பயணிகள் ரயில்வே காவல்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து உடலை மீட்ட ரயில்வே காவல்துறையினர் தற்கொலை செய்துகொண்ட நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ரயில்வே காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட நபர் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சென்னைக்கும் அங்கிருந்து ராமேஸ்வரம் வந்ததற்கான பயணச்சீட்டு இருந்துள்ளது. தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு வந்ததற்கான பயணச்சீட்டும் இருந்துள்ளது. அதனை வைத்து அவருடைய ஆதார் எண் மூலம் இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

எப்போதும் பயணிகள் நடமாட்டம் உள்ள மையப் பகுதியில் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்யும்வரை யாருக்கும் தெரியாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவல்துறையினர் ரோந்து பணியில் முறையாக ஈடுபடுகின்றனரா இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மதுரை ரயில் நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ரயிலில் தவறி இளைஞர் உயிரிழந்த நிலையில், இன்று ஒருவர் தற்கொலை என அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in