கவனித்துக்கொள்ளும்படி சொல்லிச்சென்ற மனைவி; பாலியல் தொந்தரவு செய்த கணவர்: அங்கன்வாடியில் சிறுமிக்கு நடந்த துயரம்!
Bala K

கவனித்துக்கொள்ளும்படி சொல்லிச்சென்ற மனைவி; பாலியல் தொந்தரவு செய்த கணவர்: அங்கன்வாடியில் சிறுமிக்கு நடந்த துயரம்!

அங்கன்வாடிக்குச் சென்ற சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக அங்கன்வாடி பணியாளர் மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே வெண்ணமுத்துப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருபவர் அன்னக்கொடி (54). இந்நிலையில், நேற்று முன்தினம் அன்னக்கொடி தனது கணவரைக் காசி(60) என்பவரை அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு வெளியே சென்று உள்ளார். அப்போது அங்குள்ள 4 வயது சிறுமிக்குக் காசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த சிறுமி தனது தாயிடம் தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்லியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் கீரனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், கீரனூர் போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து காசியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவத்துக்குத் துணையாக இருந்ததாக அன்னக்கொடியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in