கடலூர் கலெக்டரிடம் கண்ணீர் விட்டு அழுத வயதான விவசாயி: காரணம் என்ன?

கடலூர் கலெக்டரிடம் கண்ணீர் விட்டு அழுத வயதான விவசாயி: காரணம் என்ன?

கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் வயதான விவசாய ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்த வயதான விவசாயி கலியபெருமாள் என்பவர் வந்தார். அப்போது ஆட்சியரை சந்தித்து ஒரு புகாரை அளித்தார். அதில், தனது நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தன்னை எரித்து விடுவதாக மிரட்டுகின்றனர் என்றும் அவர்களிடமிருந்து தனக்கும் தனது நிலத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

இந்த புகாரை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலெக்டரிடம் வயதான விவசாயி ஒருவர் கண்ணீர் விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in