சென்னையில் இடிந்து விழுந்த பழைமையான கட்டிடம்; பறிபோன உயிர்கள்: மருந்து வாங்க வந்தபோது துயரம்

சென்னையில் இடிந்து விழுந்த பழைமையான கட்டிடம்; பறிபோன உயிர்கள்: மருந்து வாங்க வந்தபோது துயரம்

சென்னை கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. மேலும் பலத்த காயம் அடைந்த இருவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை, சௌகார்பேட்டை ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரம் பகுதியில் நூறு ஆண்டுகள் பழைமையான தனியார் கட்டிடம் ஒன்றின் தரை தளம் வணிக வளாகம் போல செயல்பட்டு வந்தது. மளிகைக் கடை, மெடிக்கல் ஸ்டோர் உள்ளிட்டவை அந்த கட்டிடங்களில் செயல்பட்டு வந்தன. அந்த கட்டிடம் பழைமையானது என்பதால் இடிந்து விழும் நிலையிலிருந்து வந்துள்ளது. இதனால் முதல் தளத்திலிருந்த வீடுகள் சில மாதங்களுக்கு முன்பு காலி செய்யப்பட்டன. முதல்தளம் பயன்பாட்டில் இல்லாத நிலையில், நேற்று திடீரென அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. அப்போது அந்த மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர் சங்கர்(36), மருந்து வாங்க வந்த கங்குதேவி(60), கட்டிடத்தின் அருகில் நின்றிருந்த சரவணன்(34), சிவக்குமார்(32) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

கட்டிடம் இடிந்து விழுந்ததை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்துவந்த யானைக்கவுனி தீயணைப்புப் படையினர் மீட்புப்பணியில் தீவிரம் காட்டினர். அப்போது கங்குதேவி சடலமாக மீட்கப்பட்டார். மேலும், சங்கர், சரவணன், சிவக்குமார் ஆகியோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சங்கர் இன்று உயிரிழந்தார்.

இதனிடையே, அமைச்சர் சேகர் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில், "கனமழை காரணமாக பூக்கடை மிண்ட் தெருவில் பழுதடைந்த கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த நிலையில், செய்தியறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்று தீயணைப்பு துறை, காவல் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தி காயம் அடைந்து மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினோம்'' என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in