நலத்திட்டங்களை கண்காணிக்க 30 அதிகாரிகள் நியமனம்: அறிக்கை அளிக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு!

நலத்திட்டங்களை கண்காணிக்க 30 அதிகாரிகள் நியமனம்: அறிக்கை அளிக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழக அரசின் நலத் திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா, அதில் நடைமுறை சிக்கல்கள் ஏதாவது உள்ளதா என்பதைக் கண்காணிக்க 30 அதிகாரிகளைத் தமிழக அரசு நியமித்துள்ளது.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று  ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், புதிய ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணத் திட்டம், பட்டியல் இன மக்கள் நிலம் வாங்குவதற்குச் சலுகை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அடிக்கடி சர்ச்சைகளும் எழுகின்றன.

காலை உணவுத் திட்டத்தில் குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதில்லை எனச் சர்ச்சை எழுந்தது. அதுபோல் அடிக்கடி ஏதாவது ஒரு செய்தி வெளியாகி தமிழக அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக முதல்வர் கவனத்திற்கு சென்றுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்கள் முறையாகச் செயல்படுகிறதா என்பதைக் கண்காணிக்க மாநிலம் முழுவதும் 30 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அதிகாரிகள் மாதத்தில் நான்கு நாட்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தவும், நலத்திட்டங்களைக் கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in