அதிகாரி அவமானப்படுத்தி விட்டார்: காவல் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த எஸ்.ஐ

அதிகாரி அவமானப்படுத்தி விட்டார்:  காவல் நிலையத்தில்  துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த எஸ்.ஐ
7

காவல்துறை அதிகாரி தன்னை அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று வீடியோவை பதிவு செய்து விட்டு காவல் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு எஸ்.ஐ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் எஸ்.ஐயாக பணியாற்றியவர் சதீஷ்குமார்(52). இவர் காவல் நிலையத்தில் இன்று தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு செல்போனில் ஒரு வீடியோவை பதிவு செய்து வைத்திருந்துள்ளார்.

இதில், நேற்று முன்தினம் தண்டா காவல் நிலைய அதிகாரியான ஓன்கர்சிங் ஆய்வின் போது தன்னை அவமானப்படுத்தியதாகவும், அதனால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹோஷியார்பூரில் காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் தங்களை அணுகுமாறு போலீஸ் சூப்பிரண்டு சர்தாஜ் சிங் சாஹல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in