முதல்வர் ஸ்டாலினுடன் ஒடிசா அமைச்சர் சந்திப்பு: உலகக்கோப்பை ஹாக்கி போட்டியைக் காண அழைப்பு!

முதல்வர்  ஸ்டாலினுடன் ஒடிசா அமைச்சர் சந்திப்பு: உலகக்கோப்பை ஹாக்கி போட்டியைக் காண அழைப்பு!

ஒடிசா மாநிலத்தின் அமைச்சர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஒடிசாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை ஹாக்கி போட்டியைக் காண அழைப்பு விடுத்தார். இதுதொடர்பாக ஒடிசா முதல்வர் எழுதிய கடிதத்தையும் அவரிடம் கொடுத்தார்.

ஒடிசாவில் வரும் ஜனவரி மாதம் ஆண்களுக்கான உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டி நடக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக வந்து பங்கேற்குமாறு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், ஏற்கெனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி வழியாக அழைத்திருந்தார். இந்நிலையில் இப்போது நவீன் பட்நாயக் இதுதொடர்பான கடிதம் ஒன்றையும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ளார்.

இந்தக் கடிதத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் இல்லத்தில் ஒடிசா மாநில கூட்டுறவு, உணவுப்பொருள் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் அடானு சப்யசாசி நாயக் நேரில் சந்தித்து வழங்கினார். அந்நிகழ்வின் போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்தார். மேலும் ஒடிசா என அச்சடிக்கப்பட்ட விளையாட்டு ரசிகர்கள் பயன்படுத்தும் ஜெர்சி பனியனையும் அமைச்சர் அடானு சப்யசாசி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in