பிரச்சாரப் பொருட்களுக்கு ரூ.50 ஆயிரம் டெபாசிட் கட்டுங்கள்... வேட்பாளர்களை அலறவிடும் ஒடிசா காங்கிரஸ்!

காங்கிரஸ்
காங்கிரஸ்

ஒடிசாவில் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் சீட் எதிர்பார்க்கும் வேட்பாளர்கள் பிரச்சாரப் பொருட்களுக்கு ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்ய வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ஒடிசா காங்கிரஸ் தலைவர் சரத் பட்நாயக்
ஒடிசா காங்கிரஸ் தலைவர் சரத் பட்நாயக்

ஒடிசா மாநிலத்தில் 21 மக்களவைத் தொகுதிகளுக்கும், 147 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய நாள்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், பிரச்சாரப் பொருள்களை பெறுவதற்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்க வேண்டும் என ஒடிசா பிரதேச காங்கிரஸ் கமிட்டி (ஒபிசிசி) இதுவரை இல்லாத புதிய நிபந்தனையை விதித்துள்ளது.

இதுதொடர்பாக, கட்சி சார்பில் வேட்பாளராக பரிசீலிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஒபிசிசி தலைவர் சரத் பட்நாயக் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த நடைமுறை குறித்து சரத் பட்நாயக் கூறுகையில், “பிராண்டிங் மற்றும் பிரச்சாரப் பொருட்களை வழங்குவதற்காக கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களிடமிருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலைகளை ஏற்க ஓபிசிசி தயாராக உள்ளது.

ஒடிசா மாநிலம்
ஒடிசா மாநிலம்

காசோலையானது எந்த தனிப்பட்ட தலைவரின் பெயரில் இல்லாமல் ஓபிசிசி பெயரில் மட்டுமே அனுப்பபப்பட வேண்டும் என வேட்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

அம்மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் சட்டப் பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 3 ஆயிரம் விருப்ப மனுக்கள் கட்சித் தலைமைக்கு வந்துள்ளதாகவும், இந்நிலையில் சீட் எதிர்பார்க்கும் ஏராளமான வேட்பாளர்கள் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக அம்மாநில மூத்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “தேர்தல் பிரசாரத்துக்கு தேவையான பொருட்களை எளிதாக வழங்குவதற்கும், தேர்தலில் தீவிர ஆர்வமில்லாத வேட்பாளர்களை வடிகட்டுவதற்கும் இந்த நடவடிக்கை உதவும்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...    

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவினர் மோதல்... கடலூரில் பரபரப்பு!

கமல் படத்திற்காக பிணத்திற்கு மேக்கப் போட்ட டேனியல் பாலாஜி!

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை... வெளியானது அதிர்ச்சி வீடியோ!

ஆடுஜீவிதம் - சினிமா விமர்சனம்

மின்கம்பத்தில் மோதி சிதறிய இருசக்கர வாகனம்... கபடி வீரர்கள் இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in