மகளின் முறை தவறிய உறவைக் கண்டித்த பெற்றோர்: ஆத்திரத்தில் வாலிபர் நிகழ்த்திய கொடூரம்

மகளின் முறை தவறிய உறவைக் கண்டித்த பெற்றோர்: ஆத்திரத்தில் வாலிபர் நிகழ்த்திய கொடூரம்

முறைதவறிய காதலில் இருந்து விடுபட்டு, பெற்றோர் எச்சரித்ததன் காரணமாக இளம்பெண் திருந்தி வாழ்ந்தார். இதனால் ஆத்திரத்தில் கள்ளக்காதலன் பெண்ணின் பெற்றோரை கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பச்சகலாகவுண்டனூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(57). இவரது மனைவி ராணி(54). இந்த தம்பதியின் மகள் உமாவுக்கு திருமணம் முடிந்து இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் உமாவின் கணவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உயிர் இழந்தார். இதன் காரணமாக பெற்றோருடன் உமா வசித்து வந்தார். தன் மகன்களைப் படிக்க வைப்பதற்காக மில் வேலைக்கும் சென்று வந்தார். அப்போது, தங்கச்சியம்மா பட்டியைச் சேர்ந்த காளிமுத்து(30) என்பவரோடு அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் இது கள்ளத்தொடர்பாக மாறியது. ஏற்கெனவே கணவனை இழந்து நிற்கும் நீ, இதுபோன்ற செயலில் ஈடுபடாதே என தொடர்ந்து உமாவிடம் அவரது பெற்றோர் அறிவுறுத்தி வந்தனர். இதன் காரணமாக உமா, காளிமுத்துவுடனான தொடர்பைத் துண்டித்தார். இதனால் காளிமுத்து ஆத்திரம் அடைந்தார். நேரே உமா வீட்டுக்குச் சென்றவர் அவரது பெற்றோரான ராஜேந்திரன், ராணியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். வெட்டுக் காயங்களுடன் இருவரும் அலறியபடி வீட்டை விட்டு ஓடினர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதையடுத்து காளிமுத்துவையும் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இதையடுத்து காளிமுத்து கைது செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in