பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசம் அதிகரித்து விட்டது: ஆந்திரா ஐகோர்ட்டில் திடீர் வழக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசம் அதிகரித்து விட்டது: ஆந்திரா ஐகோர்ட்டில் திடீர் வழக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசம் அதிகரித்து விட்டதாகவும், ஐபிஎஃப் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும் ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சியில் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவிற்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. இந்தியில் தான் முதன் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் பின்பு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழில் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளது. நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார். ஆனால், தெலுங்கில் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி தொடங்கி விட்டது. நடிகர் நாகார்ஜுனா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசம் அதிகரித்து விட்டதாக ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொகுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் கேத்தி ஜெகதீஸ்வர ரெட்டி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் சிவபிரசாத் ரெட்டி, பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ ஐபிஎஃப் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் ஆபாசத்துடன் நடத்துவதாக மனுதாரர் தரப்பில் வாதிட்டார். இதுகுறித்து, விளக்கமளிக்க மத்திய அரசின் வழக்கறிஞர், நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டார். இதையடுத்து, எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து அடுத்த ஒத்திவைப்பில் முடிவு செய்யப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்ததுடன் விசாரணையை அக்.11-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in