ரயில் நிலைய டிவியில் ஒளிபரப்பான ஆபாச படம்: பதறியடித்து ஓடிய பெண் பயணிகள்

பாட்னா ரயில் நிலையம்
பாட்னா ரயில் நிலையம்ரயில் நிலைய டிவியில் ஒளிபரப்பான ஆபாச படம்: பதறியடித்து ஓடிய பெண் பயணிகள்

பீகாரில் ரயில் நிலைய தொலைக்காட்சிகளில் மூன்று நிமிடங்கள் தங்கு தடையின்றி ஆபாச படம் ஒளிபரப்பானதால் ரயிலுக்குக் காத்திருந்த பெண் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் பாட்னா ரயில் நிலையம் உள்ளது. அன்றாட ம் லட்சக்கணக்கான பயணிகள் இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இதன் காரணமாக இந்தியாவில் மிக முக்கியமான ரயில் நிலையமாக பாட்னா கருதப்படுகிறது.

இந்த ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் பயணிகளின் வசதிக்கான தொலைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியூர் செல்லும் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகளுக்காக இந்த தொலைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொலைக்காட்சிகளில் விளம்பரங்களும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், இந்த ரயில் நிலையத்தில் உள்ள 10-வது நடைமேடையில் அமைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிகளில் நேற்று திடீரென மூன்று நிமிடங்களுக்கு தொடர்ந்து தங்கு தடையின்றி ஆபாச படம் ஒளிபரப்பானது. இதனால் ரயிலுக்கு காத்திருந்த பெண் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ரயில் நிலையத்திற்கு வெளியே ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து பயணிகள் ரயில்வே போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். இந்த நிலையில் ரயிலுக்காக காத்திருந்த பயணி ஒருவர், இந்த காட்சியை தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இந்த காட்சி வேகமாக பரவியது.

இதையடுத்து ரயில்வே பிளாட்பாரங்களில் உள்ள தொலைக்காட்சிகளில் காட்சிகளை ஒளிபரப்பு செய்யும் தத்தா கம்யூனிகேஷன் நிறுவனத்தினரை ரயில்வே போலீஸார் தொடர்பு கொண்டு ஆபாச காட்சிகளை நிறுத்தியுள்ளனர். இதையடுத்து தத்தா கம்யூனிகேஷன் நிறுவனத்தின் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் அந்த நிறுவனத்தின் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாட்னா ரயில் நிலையத்தின் தொலைக்காட்சிகளில் விளம்பரங்களை ஒளிபரப்புவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரயில்வே நிறுவனம் ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் ஆபாச படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து பாட்னா ரயில்வே துறை விசாரணையை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் பாட்னா ரயில் நிலையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in