கரைகடந்த சிட்ராங் புயல் - துறைமுகங்களில் 2ம் எண் எச்சரிக்கை கூண்டு: மிரட்டும் கனமழை

கரைகடந்த சிட்ராங் புயல் - துறைமுகங்களில் 2ம் எண் எச்சரிக்கை கூண்டு: மிரட்டும் கனமழை

சிட்ராங் புயல் திங்கட்கிழமை இரவு 9:30 மணி முதல் 11:30 மணியளவில் வங்கதேசத்தில் பாரிசல் அருகே டின்கோனா தீவு மற்றும் சாண்ட்விப் இடையே கரையைக் கடந்தது.

சிட்ராங் புயல் கரையைக் கடந்த நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 90 கிமீ மற்றும் 100 கிமீ வேகத்தில் வீசியது என்று அந்த வங்கதேச வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயலின் தாக்கம் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வங்கதேசம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள மேற்கு வங்கம், அசாம், மேகலயா, மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் மீதான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை ("சித்ராங் சூறாவளி") மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடகிழக்கு வங்களதேசம் மற்றும் அகர்தலாவில் இருந்து 90 கிமீ வடக்கு-வடகிழக்கு மற்றும் ஷில்லாங்கிற்கு 100 கிமீ தெற்கே-தென்மேற்கில் 05.30 மணிக்கு மையம் கொண்டிருந்தது என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் அருகே  வங்கக்கடலில் உருவான  குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை  நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் கடலூர், புதுச்சேரி, நாகை, காரைக்கால், தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் துறைமுகங்களில்  ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.  தற்போது அந்த  குறைந்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று சிட்ராங் புயலாக உருவெடுத்தது. இதனால் சென்னை, தூத்துக்குடி, நாகை, கடலூர், காரைக்கால் உள்ளிட்ட தமிழக துறைமுகங்களில் மீனவர்களை எச்சரிக்கும் விதமாக   இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கின்றது.

சிட்ராங் புயல் காரணமாக வங்கதேசத்தில் கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள் முன்  எச்சரிக்கையாக பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு நிவாரணம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் கரையைக் கடந்த நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் வங்கதேச அரசு மேற்கொண்டு வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in