பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்துகிறீர்களா?- அதிரடி காட்டி வருகிறது சென்னை போக்குவரத்து போலீஸ்

நம்பர்பிளேட் விதிமீறல்
நம்பர்பிளேட் விதிமீறல் பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்துகிறீர்களா?- அதிரடி காட்டி வருகிறது சென்னை போக்குவரத்து போலீஸ்

நம்பர் பிளேட் விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை சென்னை போக்குவரத்து போலீஸாா் தொடக்கியுள்ளனர். காவல் ஆணையர் அலுவலக பார்க்கிங்கில் நம்பர் பிளேட் விதிமுறை மீறலில் ஈடுபட்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்து, நோட்டீஸ் ஒட்டி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

போக்குவரத்தை மேம்படுத்தவும், விபத்துகளை குறைக்கவும் சென்னை போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் முக்கிய சாலைகள் மற்றும் பார்க்கிங் பகுதிகளில் போக்குவரத்து போலீஸார் அதிரடி சோதனை நடத்தி, அங்கு நிறுத்தி வைக்கப்படுள்ள வாகனங்களின் விதிகளை மீறி நம்பர் பிளேட் வைத்துள்ள வாகனங்களை கண்டறிந்து அபரதாம் விதித்து வருகின்றனர்.

போக்குவரத்து போலீஸார் அறிவுறுத்தியபடி குறிப்பிட்ட அளவுகள், எண்களின் வடிவம் ஆகியவற்றை சரியான முறையில் நம்பர் பிளேட்டுகளில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் உடனடியாக அந்த இருசக்கர வாகனங்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அபராதம் விதித்தற்கான நோட்டீஸ் சம்மந்தப்பட்ட வாகனங்களில் ஓட்டப்படுகிறது.

வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம்
வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம்

அதுமட்டுமின்றி நம்பர் பிளேட்டுகளில் போட்டோக்கள் ஓட்டுவது, வாசகங்கள் எழுதுவது, நம்பர் பிளேட் இல்லாமல் இருப்பது ஆகிய வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. முதல் முறையாக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதன்பின்பும் நம்பர் பிளேட்டை சரி செய்யாமல், போலீஸில் சிக்கும் வாகனங்களுக்கு மூன்று மடங்கு அபராதம் விதிக்கப்படும். அதாவது 1500 ரூபாய் விதிக்கப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலைய பார்க்கிங் மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள பார்க்கிங்கில் வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டிவேலு தலைமையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, விதிகளை மீறி நம்பர் பிளேட் வைத்திருந்த காவலர்களின் வாகனங்களுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதேபோல் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீஸார் விதிமுறைகளை மீறி நம்பர் பிளேட் வைத்துள்ள வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in