வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - துறைமுகங்களில்  புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக உருப்பெற்றுள்ளதைத்  தொடர்ந்து தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தெற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இது மேலும் வலுப்பெற்று நாளை தமிழகக் கரையை நெருங்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இந்த நிலையில் தூரத்தில் புயல் உருவாகியுள்ளதைக்  குறிக்கும் வகையிலும், மீனவர்களுக்கு அது குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன்,  தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் இன்று  காலை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in