பிளஸ்2வில் 600க்கு 591 மார்க்; மதுரை மாவட்டத்தில் நம்பர் ஒன் இலங்கை தமிழ் மாணவி: கரம் நீட்டிய அமைச்சர் பிடிஆர்

பிளஸ்2வில் 600க்கு 591 மார்க்; மதுரை மாவட்டத்தில் நம்பர் ஒன் இலங்கை தமிழ் மாணவி: கரம் நீட்டிய அமைச்சர் பிடிஆர்
பிளஸ்2வில் 600க்கு 591 மார்க்; மதுரை மாவட்டத்தில் நம்பர் ஒன் இலங்கை தமிழ் மாணவி: கரம் நீட்டிய அமைச்சர் பிடிஆர்

பிளஸ் 2 தேர்வில் மதுரை மாவட்டத்தில் முதல் மதிப்பெண் எடுத்து சாதித்துள்ளார் இலங்கை தமிழ் மாணவி ரித்துஷா. வறுமையில் தவிர்த்த மாணவிக்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

இலங்கை தமிழ் மாணவி ரித்துஷா மதுரை மாவட்டம் ஆணையூரில் உள்ள ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் 33 ஆண்டுகளாக பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் மதுரை கூடல்நகரில் உள்ள புனித அந்தோணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார் ரித்துஷா. இவர் அண்மையில் நடந்து முடிந்த பிளஸ்2 தேர்வில் 600க்கு 591 மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் முதல் மாணவியாக சாதித்தார். இவர் தமிழ் பாடத்தில் 97 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 96 மதிப்பெண்ணும், பொருளாதாரத்தில் 99 மதிப்பெண்ணும், வணிகவியலில் 99 மதிப்பெண்ணும், கணக்கு பதிவியலில் 100 மதிப்பெண்ணும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் 100 மதிப்பெண்ணும் எடுத்துள்ளார்.

"மருத்துவம் படிக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. என்னால் நீட் தேர்வு எழுத முடியாது. ஓசி என்ற ஒரே காரணத்தினால். அதோடு, நாங்கள் வேறு நாட்டை சேர்ந்தவர் என்பதால் நீட் தேர்வு எழுத முடியாது என்று சொல்லிவிட்டார்கள். எம்பிபிஎஸ் படிப்புக்கு தகுந்த மாதிரி ஏசி படிக்க முடிவு செய்தேன்" என்று கூறியுள்ளார் மாணவி ரித்துஷா. ஆனால், வறுமையால் ஆன்லைன் மூலம் இந்த படிக்க முடிவு செய்துள்ளார் மாணவி.

இந்த தகவல் அறிந்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாணவியின் பெற்றோரை அழைத்து பேசியுள்ளார். அப்போது, மாணவியை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோருக்கு அறிவுரை கூறிய அமைச்சர், தனது காரிலேயே அழைத்துச்சென்று மாணவிக்கு பி.காம் சீட் வாங்கிக் கொடுத்துவிட்டார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in