இனி பிடித்த உணவை சாப்பிடலாம்! ரயிலிலும் வந்தாச்சு சொமேட்டோ!

இனி பிடித்த உணவை சாப்பிடலாம்! ரயிலிலும் வந்தாச்சு சொமேட்டோ!

உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ ரயில் பயணிகளுக்கு அவர்களுக்கு விருப்பமான உணவை வழங்க களம் இறங்குகிறது.

இந்திய ரயில்வே துறையின் துணை நிறுவனமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) தனது இ கேட்டரிங் பிரிவின் மூலம் ரயில் பயணிகளுக்கு உணவுகளை வழங்குகிறது. இருப்பினும் தாங்கள் விரும்பும் உணவுகளை பெற முடியவில்லையே என்ற ஆதங்கம் ரயில் பயணிகளிடம் உள்ளது. இனி அந்த கவலை ரயில் பயணிகளுக்கு இருக்காது. ரயில் பயணிகள் விரும்பும் உணவுகளை வழங்குவதற்காக ஐஆர்சிடிசி நிறுவனம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ ரயில் பயணிகளுக்கு அவர்களுக்கு விருப்பமான உணவை வழங்க களம் இறங்குகிறது.

ஐஆர்சிடிசி நிறுவனம் தற்போது பயணிகளுக்கு அவர்கள் விருப்பப்படும் உணவுகளை தேர்வு செய்யும் பரந்த வசதியை வழங்குவதற்காக சொமேட்டோ நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணியின் ஒரு பகுதியாக, சொமேட்டோ உதவியுடன் தனது இ கேட்டரிங் வலைதளம் வாயிலாக ரயில் பயணிகள் முன்கூட்டியே ஆர்டர் செய்த உணவுகளை பெறும் Proof of Concept என்ற திட்டத்தை ஐஆர்சிடிசி செயல்படுத்தியுள்ளது.

முதல்கட்டமாக டெல்லி, பிரக்யாக்ராஜ், கான்பூர், லக்னோ மற்றும் வாராணசி ஆகிய ஐந்து முக்கிய ரயில் நிலையங்களில் ப்ரூப் ஆஃப் கான்செப்ட் என்ற திட்டத்தை ஐஆர்சிடிசி தொடங்கியுள்ளது. இது தொடர்பாக ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், இ கேட்டரிங் பிரிவில், ரயில் பயணிகள் தங்களுக்கு விருப்பமான உணவுகளை ஆர்டர் செய்வதற்கான தேர்வுகளின் வரம்பை விரிவுப்படுத்தும் நோக்கில் சொமேட்டோவுடன் ஐஆர்சிடிசி இணைந்துள்ளது.

இ கேட்டரிங் வலைத்தளம் வாயிலாக மூலம் முன்கூட்டி ஆர்டர் செய்த உணவுகளை வழங்குவதற்கும், டெலிவரி செய்வதற்கும் சொமேட்டோவுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக டெல்லி, பிரக்யாக்ராஜ், கான்பூர், லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய ஐந்து முக்கிய ரயில் நிலையங்களில் ப்ரூப் ஆஃப் கான்செப்ட் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. ஐஆர்சிடிசி- சொமேட்டோ கூட்டணி முயற்சி காரணமாக ரயில் பயணிகளின் பயண அனுபவம் புதிதாகவும், வசதியாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in