நோவா ஜோகோவிச்சிற்கு 6.58 லட்சம் அபராதம்: காரணம் என்ன?

ஜோகோவிச்
ஜோகோவிச்விம்பிள்டன் போட்டி

கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதில் ஆடவர் பிரிவில் நடைபெற்ற இறுதி போட்டியில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற செர்பியாவின் நோவா ஜோகோவிச்சை வீழ்த்தி ஸ்பெயினின் 20 வயது கார்லோஸ் அல்கராஸ் வெற்றி பெற்று தனது முதல் கிராண்டஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.

இந்த ஆட்டத்தின் போது, அல்கார்ஸை எதிர்கொள்ள முடியாமல் ஜோகோவிச் பலமுறை திணறினார். இதில் ஒருமுறை செட் பாயிண்டை இழந்தபோது, ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஜோகோவிச் தனது டென்னிஸ் மட்டையை, நெட் கட்டப்பட்ட மரக்கம்பத்தில் ஓங்கி அடித்தார். இதில் அவரது மட்டை முழுமையாக உடைந்தது. அவரது இந்த செயலை நடுவர் கண்டித்ததோடு மட்டுமல்லாமல் ஒழுங்கு நடவடிக்கையாக 6 லட்சத்து 58 ஆயிரத்து 448 ரூபாய் ஜோகோவிச்சிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், சர்வீஸ் வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதற்காகவும் அவரை நடுவர் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோகோவிச், செட் பாயிண்டை இழந்ததால் ஏற்பட்ட விரக்தியில் பேட்டை உடைத்ததாக கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in