சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கான அவசரத் தேவைக்கு உதவி எண்கள் அறிவிப்பு

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கான அவசரத் தேவைக்கு உதவி எண்கள் அறிவிப்பு

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு அவசர தேவைக்கான முக்கிய உதவி எண்களை தேவசம்போர்டு அறிவித்துள்ளது. தங்களின் அவசரத் தேவைகளுக்கு பக்தர்கள் 24 மணிநேரமும் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது கடந்த மாதம் 16-ம் தேதி மாலையில் திறக்கப்பட்டது. இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். இதேபோல் எருமேலி, புல்மேடு பாதை வழியாக 15 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சபரிமலையில் தினசரி கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருவதால் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக முக்கியத் தொடர்புஎண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சன்னிதானத்தில் உள்ள பக்தர்களின் உடனடி அவசர உதவித் தேவைகளுக்கு 04735 202166, பம்பா 04735_203255, நிலக்கல் 04735_205002, மாவட்ட நிவாரண துறை 0468_2322515, பத்தனம் திட்டா மகளிர் காவல்துறை 0468_2322515, பத்தனம் திட்டா மாவட்டக் காவல்துறை 0468_2272100, 9497907963, சன்னிதானம் தகவல் தொடர்பு மையம் 04735_202048, சன்னிதான இடைத்தாவலம் 04735_202049, சன்னிதானம் அரசு மருத்துவமனை 04735_202101, பம்பா அரசு மருத்துவமனை 04735_203232, 203318, நிலக்கல் அரசு மருத்துவமனை 04735_205202, சிறப்புப் பாதுகாப்பு வாகனத்துறை 9562318181, சபரிமலை சிறப்பு காவல்துறை அதிகாரி 04735_202016, 203386, 202100, சன்னிதானம் தீயணைப்புத் துறை 04735_202033, சன்னிதானம் வனத்துறை 04735_202074, சிறப்பு காவல் அதிகாரி 04735_202029, 203523”என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் இந்த எண்களை தங்கள் செல்போனில் பதிவு செய்துகொண்டு அவசரத் தேவை ஏற்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in