தகுதியான பேராசிரியர்கள், கட்டமைப்பு வசதிகள் இல்லாத 225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி

தகுதியான பேராசிரியர்கள், கட்டமைப்பு வசதிகள் இல்லாத 225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: அண்ணா பல்கலைக்கழகம்  அதிரடி

தமிழகத்தில் தகுதியான பேராசிரியர்கள், போதிய கடடமைப்பு வசதிகள் உள்ள 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ள கட்டடக்கலை, எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகள் கொண்ட 225 பொறியியல் கல்லூரிகள் மற்றும் தனி நிறுவனங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் தகுதியான ஆசிரியர்கள், ஆய்வகங்கள்,மற்றும் உபகரணங்கள் போன்ற உள்கட்டமைப்புகள் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கல்லூரிகள் இணைப்பு நீட்டிப்பைப் பெற இரண்டு வாரங்களுக்குள் முரண்பாடுகளை சரிசெய்யுமாறு கல்லூரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் பல்கலைக்கழகம் 2022-23-ம் ஆண்டிற்கான இணைப்பு நீட்டிப்பு கோரும் 476 கல்லூரிகளில் நேரடி நடத்திய ஆய்வில் 225 கல்லூரிகள் 50 சதவீதத்திற்கும் அதிகமான குறைபாடு உள்ள கல்லூரிகள் எனவும், 62 கல்லூரிகள் 25 சதவீதம் குறைபாடு உள்ளன எனவும், தகுதியற்ற முதல்வர்களைக் கொண்ட கல்லூரிகள் 23 எனவும், 25 சதவீதத்திற்கும் குறைவான பற்றாக்குறை உள்ள கல்லூரிகள் 166 எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in