10 ஆண்டுகளாக ஆதாரை புதுப்பிக்கவில்லையா?: இலவசமாக புதுப்பிக்க மத்திய அரசு ஏற்பாடு

ஆதார் கார்டு
ஆதார் கார்டு10 ஆண்டுகளாக ஆதாரை புதுப்பிக்கவில்லையா?: இலவசமாக புதுப்பிக்க மத்திய அரசு ஏற்பாடு

ஆதார் அட்டை விவரங்களை இணையதளத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவசமாக புதுப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையில் புதுப்பிக்காதவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு புதுப்பித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த சேவை நேற்று முதல் ஜூன் 14-ந்தேதி வரை இலவசமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை 'my Aadhaar' எனும் இணையதளத்தில் மட்டுமே இலவசமாகப் பெற முடியும். மேலும் ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுப்பித்தால் வழக்கம்போல் ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) லட்சக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பயனாளர்கள் 'myaadhaar.uidai.gov.in' என்ற இணையத்தில் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி தங்களின் தரவுகளைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in