மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கவில்லையா?- புதிய லிங்க் வெளியிட்டது தமிழக மின்சார வாரியம்!

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கவில்லையா?- புதிய லிங்க் வெளியிட்டது தமிழக மின்சார வாரியம்!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க புதிய லிங்கை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி தங்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை பொதுமக்கள் இணைத்து வருகின்றனர். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாள் ஆகும். இதனால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனிடையே, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அனைத்து வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் ஒரு நாளைக்கு ஏராளமானவர்கள் குவிந்து வருவதால் சில பேருக்கு மட்டுமே மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது. இதனால் பல சிரமங்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். மேலும், ஒரே நேரத்தில் ஆதார் எண்ணை இணைக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருவதால் மின்வாரிய இணையதளம் மிகவும் மெதுவாக செயல்படுவதால் மின்வாரிய ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.

இந்த நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அப்டேட் செய்யப்பட்ட புதிய லிங்கை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம். http://Bit.ly/linkyouraadhar என்ற மேம்படுத்தப்பட்ட இணைய முகவரியில் ஆதார் எண்ணையை இணைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in