ஐசிசி கனவு அணியில் இந்த நாட்டு வீரர்கள் ஒருவர்கூட இல்லை: அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஐசிசி கனவு அணியில் இந்த நாட்டு வீரர்கள் ஒருவர்கூட இல்லை: அதிர்ச்சியில் ரசிகர்கள்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிவடைந்த நிலையில், ஐசிசி கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த டி20 உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் படுதோல்வியை சந்தித்து வெளியேறியது அந்த நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அதே நேரத்தில் அரையிறுதிப்போட்டிக்கு இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் சென்றது. அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் இந்தியாவும், பாகிஸ்தான் அணியிடம் நியூசிலாந்தும் தோல்வி அடைந்தது. இதையடுத்து, பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

நேற்று நடந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி. வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில் ஆஸ்திரேலியா தனது சொந்த நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களை கவலை அடைய வைத்ததோடு உலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

டி20 உலக கோப்பை முடிந்த நிலையில் ஐசிசியின் கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 11 வீரர்கள் கொண்ட பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இந்தியா இங்கிலாந்து அணியில் இருந்து தலா மூன்று வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். தொடக்க வீரராக அலெக்ஸ் மற்றும் பட்லர் களமிறங்க உள்ளனர். 3-வது மற்றும் 4-வது வீரர்களாக விராட் கோலியும், சூரியகுமாரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அடுத்து நியூசிலாந்து வீரர் பிலிப்ஸ் இடம் பிடித்துள்ளார். ஜிம்பாப்வே வீரா சிக்கந்தர் ரசாக், பாகிஸ்தானின் சதாப்கான் ஆகிய ஆல் ரவுண்டர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் ஆண்ட்ரூஸ், இங்கிலாந்தின் மார்க், பாகிஸ்தானின் அப்ரிடி, இந்தியாவின் அஸ்வின் சிங் ஆகியோர் வேக பந்துவீச்சாளர்களாகவும் அணியில் இடம் பிடித்துள்ளனர். அதே நேரத்தில் ஆஸ்திரேலியா வீரர்கள் ஒருவர் கூட ஐசிசி கனவு அணியில் இடம் பெறவில்லை என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in