பொன்.குமார்
பொன்.குமார் வடமாநில தொழிலாளர்களும் நலவாரியத்தில் பதிவு: தலைவர் பொன்.குமார் தகவல்

வடமாநில தொழிலாளர்களும் நலவாரியத்தில் பதிவு: பொன்.குமார் தகவல்

"வடமாநில தொழிலாளர்களும் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றனர்'' என தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தலைவர் பொன்.குமார் கூறினார்.

கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு மாவட்ட மாநாடு கோவை கொடிசியாவில் வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தலைவர் பொன்.குமார், "கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் மாவட்ட மாநாடு கோவையில் முதன் முறையாக நடைபெற உள்ளது. சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமான துறை சார்ந்த அமைப்பினர் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக, அமைச்சர்கள் முத்துச்சாமி, சாமிநாதன், செந்தில்பாலாஜி, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

கட்டுமானத்துறையை ஊக்கப்படுத்தி வரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் மாநாடு நடைபெற உள்ளது. நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கட்டுமான துறைக்கு மத்திய, மாநிலத்தில் தனி அமைச்சகம் வேண்டும். கட்டுமான பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய உற்பத்தியாளர்கள் மற்றும் பயன்பாட்டாளர்கள் பாதிக்காத வகையில் விலை நிர்ணயக் குழு அமைக்க வேண்டும். பொறியாளர் கவுன்சில் அமைக்கப்பட வேண்டும். வீடு மற்றும் வீட்டுமனை விற்பனை தொழிலில் ஈடுபட்டு வரும் நிலத்தரகர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை மாநாட்டில் வலியுறுத்தப்பட உள்ளது. வடமாநில தொழிலாளர்களும் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றனர்" என கூறினார்.

இந்த சந்திப்பின்போது கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் யுவராஜ், கண்ணன், ஜெகதீசன், ஸ்ரீதர் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in