கோபத்தை ஏற்படுத்திய அந்த வார்த்தை: குமரியில் கொடூரமாக கொல்லப்பட்ட வடமாநில வாலிபர்

கொலை
கொலை

கன்னியாகுமரி மாவட்டம், சித்திரங்கோடு பகுதியில் தங்கி வேலை செய்துவந்த வெளிமாநிலத் தொழிலாளி சக பணியாளரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கடந்த இருமாதங்களுக்கு முன்பு இதேபோல் மணக்குடி பகுதியில் தும்பு ஆலையில் வேலைசெய்து வந்த வடமாநிலத் தொழிலாளி கொலை செய்யப்பட்ட நிலையில் இது இரண்டாவது சம்பவமாகும்.

சித்திரங்கோடு பகுதியில் அலங்கார தரை ஓடுகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று உள்ளது. இங்கு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சோம்போ(28), அனில் பர்மன்(22) மற்றும் ஜார்க்ண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஆகியோர் வேலைசெய்து வருகின்றனர். இவர்கள் ஐந்துபேரும் சேர்ந்து ஒரே அறையில் தங்கியிருந்தனர். இவர்கள் நேற்று இரவு ஒன்றாக சேர்ந்து மது அருந்தினர். அப்போது சோம்போ, அனில் பர்மன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சோம்பா, அனில்பர்மன் வீட்டுப்பெண்களை தகாத வார்த்தைகளில் திட்டினார். இதில் கோபம் அடைந்த அனில்பர்மன் அங்கிருந்த பாட்டில், இரும்புக் கம்பியால் சோம்போவைக் கொடூரமாகத் தாக்கினார். இதில் சோம்போ சம்பவ இடத்திலேயே பலியானார்.

திருவட்டாறு போலீஸார் சோம்போவின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அசாமில் இருக்கும் சோம்போவின் உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. குமரிமாவட்டத்தில் இருமாதங்களுக்கு முன்பு மணக்குடி பகுதியில் இருக்கும் தும்பு ஆலை ஒன்றில் வடமாநிலத் தொழிலாளி நானக்‌ஷா முன்னா(35) என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்தக் குற்றச்சம்பவமும் குடிபோதையில் ஏற்பட்ட தகராறிலேயே நிகழ்ந்தது. அந்தவரிசையில் இப்போது அடுத்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in