`சென்னையில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்’- பிரேமானந்த் சின்ஹா

சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா
சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா `சென்னையில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்’- பிரேமானந்த் சின்ஹா

’’ சென்னையில் தங்கி இருக்கும் வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல விரும்பவில்லை, மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக கூறுகின்றனர்’’ என சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கும் செல்லும் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. தமிழக முதலமைச்சர் முதல் டிஜிபி வரை அனைவரும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் தங்கி இருக்கும் வட மாநில தொழிலாளர்கள் குறித்து சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்தாவது, ‘’இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களை கண்காணித்து வருகிறோம். சென்னை பொறுத்தவரை எல்லாமே அமைதியாகத்தான் உள்ளது. கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்.

சென்னையில் தங்கி வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்கள் யாரும் சொந்த ஊருக்கு செல்ல விரும்பவில்லை, மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக கூறுகின்றனர். ஹோலி பண்டிகையைக் கொண்டாடவே சொந்த ஊருக்கு செல்வதாக கூறுகிறார்கள். சமூக வலைதளங்களை சைபர் க்ரைம் போலீஸார் கண்காணித்து வருகிறார்கள். வதந்தி, பொய் செய்தி பரப்பினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in