கொதிகலனிலிருந்து சிந்திய வெந்நீர்; வெந்துபோன தொழிலாளரின் உடல்: வேலை செய்தபோது நேர்ந்த சோகம்

கொதிகலனிலிருந்து சிந்திய வெந்நீர்; வெந்துபோன தொழிலாளரின் உடல்: வேலை செய்தபோது நேர்ந்த சோகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியிடத்தில் கொதிநீர் சிந்தியதில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி பரிதாபமாக உயிர் இழந்தார்.

ஜார்க்கண்ட் மாநிலம் பஞ்ச்கதியபஜார் பகுதியைச் சேர்ந்தவர் ரபிக் முபின்(34), இவரது சகோதரர் முபிஜீதீன் முபின்(31) வட மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் கன்னியாகுமரி மாவட்டம், கொடுப்பைக்குழி பகுதியில் உள்ள மீன் வலை தயாரிப்புக் கம்பெனி ஒன்றில் வேலை செய்துவந்தனர். இவர்கள் இதற்கென வலை கம்பெனியிலேயே தங்கியிருந்து பணிசெய்து வந்தனர்.

வலை கம்பெனியில், ரபிக் முபின் கொதிகலனில் சாயம் முக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கொதிகலனில் இருந்த வெந்நீர் சிந்தியது இந்த வெந்நீர் ரபிக் முபினின் உடல் முழுவதும் பட்டது.

வலை கம்பெனியில் வேலை செய்த தொழிலாளர்கள் ரபிக் முபினை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரபிக் முபின் இன்று உயிர் இழந்தார். இந்த பணியிட விபத்து குறித்து முபிஜீதின் முபின் கொடுத்தப் புகாரின் பேரில் இரணியல் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in