`எங்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கவும்'- பெண் அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

`எங்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கவும்'- பெண் அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

புதுச்சேரி மாநிலத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி உதவித் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி இன்று ஏஐடியுசி சார்பில்  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தப்பட்டது.

புதுச்சேரி மாநிலத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் எந்தவிதமான சமூக பாதுகாப்பும்,  உத்தரவாதமான வருமானமும் இன்றி இருந்து வருகிறார்கள். இவர்கள் வரக்கூடிய குறைந்த  வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு அமைப்பு சாரா சங்கத்தின் மூலம் கடந்த காலங்களில் வழங்கி வந்த தீபாவளி உதவித்  தொகையும் சில ஆண்டுகளாக சரிவர கொடுக்கப்படவில்லை. 

இந்த நிலையில் இந்த ஆண்டு இவர்களுக்கு 5000  ரூபாய் தீபாவளி உதவித்தொகையாக  அரசு வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் கட்டிட தொழிலாளர்களுக்கு  3500 ரூபாய் வழங்க முடிவு செய்துள்ள புதுச்சேரி அரசு இதுவரை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி உதவித்தொகை  இதுவரை வழங்கவில்லை.

தீபாவளிக்கு இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில் அரசு இனியும் காலம் கடத்தாமல் கட்டிட தொழிலாளர்களுக்கு வழங்கியது போல் 3500 ரூபாய், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் உடனடியாக தீபாவளி உதவித்தொகை வழங்கிட வேண்டும்,  இந்த பணத்தை தீபாவளிக்கு முன்னதாக வங்கியில் செலுத்த வேண்டும் என்பதை  வலியுறுத்தி    தொழிலாளர் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா அலுவலகத்தை இன்று  காலை ஏஐடியுசி சார்பில் அதன் மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம் தலைமையில முற்றுகையிட்டு போராட்டம் நடத்த்தினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in