மனைவியுடன் சண்டை; இன்ஸ்டாகிராமில் தற்கொலைப் பதிவு: துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய போலீஸ்

மனைவியுடன் சண்டை; இன்ஸ்டாகிராமில் தற்கொலைப் பதிவு: துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய போலீஸ்

இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் தற்கொலை செய்துகொள்வதாக பதிவிட்ட இளைஞரை, துரிதமாக செயல்பட்டு நொய்டா காவல்துறை காப்பாற்றியுள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் தன்கவுரில் உள்ள சந்திரவலி கிராமத்தைச் சேர்ந்த அமித் குமார் எனும் நபர், நேற்று இரவு மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், இதனால் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அவர் ஒரு தூக்கு கயிற்றின் புகைப்படத்தை வெளியிட்டு "இன்று நான் என்னை முடித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு உடனடியாக லக்னோவில் உள்ள டிஜிபி தலைமையகத்தின் ஊடகப் பிரிவுக்கு இன்ஸ்டாகிராம் நெட்வொர்க் மூலம் அனுப்பப்பட்டது. இடத்தைக் கண்டுபிடித்ததில், அந்த இளைஞர் உ.பி.யின் கவுதம் புத் நகரில் வசிப்பவர் என்பது தெரியவந்தது. உடனே இந்த தகவல் கவுதம் புத் நகர் காவல்துறையின் மீடியா செல்லுக்கு அனுப்பப்பட்டது. நொய்டா மீடியா செல் உடனடியாக பாதிக்கப்பட்டவரைத் தேடத் தொடங்கி அவரது வீட்டை அடைந்து காப்பாற்றியது. நொய்டா போலீசார் அமித் குமாரின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்து அவருக்கு ஆலோசனை வழங்கினர், தற்போது அவர் நலமாக உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in