பழங்கால இசையை இக்கால இளைஞர்களுக்கு கொண்டு சென்ற இசைப்போட்டி: இது உசிலம்பட்டிக் கச்சேரி!

இசைப் போட்டி
இசைப் போட்டி

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே நடைபெற்ற வித்தியாசமான இசைப்போட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பொதுவாக கோயில் திருவிழாக்களிலும், ஊர் திருவிழாக்களிலும் இசை மற்றும் பாட்டுக் கச்சேரி நடைபெறுவது வழக்கம். அதிலும், சில முக்கிய திருவிழாக்களில் நாட்கணக்காக கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஆனால், மதுரையை அடுத்த உசிலம்பட்டி அருகே உள்ள தும்மக்குண்டு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற இசைப்போட்டி தான் இப்பகுதியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இவ்வூரில் இசை அமைப்பாளர் டி.எம்.சௌந்தரராஜனுக்கு (டிஎம்எஸ்) நினைவு மன்றம் ஒன்று உள்ளது. பழைய பாடல்களை இளைஞர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் மற்றும் பழைய கலாச்சார பாடல்கள் குறித்து இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்த இந்த இசை மன்றம், மாபெரும் இசைப் போட்டியை திருவிழாவைப் போல வெகு விமர்சையாக நடத்தி உள்ளது.

கூம்பு வடிவ ஒலிபெருக்கி
கூம்பு வடிவ ஒலிபெருக்கி

இவ்விழாவில் பழங்கால ரெக்கார்டர்கள் மற்றும் கூம்பு வடிவ ஒலிபெருக்கி மூலம் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. பெரும்பாலும் டிஎம்எஸ் பாடல்கள் மட்டுமே ஒலிபரப்ப அறிவுறுத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்று முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், குலுக்கல் முறையில் இரு பிரிவினராக பிரித்து, ஒவ்வொரு போட்டியிலும் பாடல்களை தெளிவாகவும், சத்தமாகவும் ஒலிபரப்பும் ஒலிபெருக்கி உரிமையாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கி உரிமையாளர்கள் குழுக்களாகப் பங்கேற்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in