இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!

2022-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நோபல் பரிசு ஆண்டு தோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியலுக்கான நோபல் பரிசை தேர்வு குழு இன்று அறிவித்துள்ளது. அதன்படி, பிரான்சின் அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர், ஆஸ்திரியாவின் ஷிலிங்கருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கலான ஃபோட்டான் சோதனை, பெல் ஏற்றத்தாழ்வுகளை மீறுதல், குவாண்டம் தகவல் அறிவியல் ஆகிய ஆய்வுக்காக இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in