பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!

2022-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது நோபல் பரிசு. ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவத்துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது. இந்தாண்டு அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுவிட்டது.

தற்போது, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பென் பெர்னாக், டக்ளஸ் டைமண்ட், பிலிப் டிவிக் ஆகியோருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்த ஆய்வுக்காக 3 பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in