"பாகிஸ்தானில் எந்த மத சிறுபான்மையினரும் சுதந்திரமாக வாழ முடியாது" - ஐ.நாவில் இந்தியா கண்டனம்

ஐ.நா.
ஐ.நா."பாகிஸ்தானில் எந்த மத சிறுபான்மையினரும் சுதந்திரமாக வாழ முடியாது" - ஐ.நாவில் இந்தியா கண்டனம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சிறுபான்மையினரின் மத சுதந்திரம் குறித்து பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியது. எந்த மத சிறுபான்மையினரும் இன்று பாகிஸ்தானில் சுதந்திரமாக வாழ முடியாது என இந்தியா தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் பதிலளிப்பதற்கான உரிமையைப் பயன்படுத்தி, இந்தியாவின் பிரதிநிதி சீமா பூஜானி, பாகிஸ்தான் பிரதிநிதி ஹினா ரப்பானி காரை கடுமையாக சாடினார். "எந்த மத சிறுபான்மையினரும் இன்று பாகிஸ்தானில் சுதந்திரமாக வாழவோ அல்லது தங்கள் மதத்தை கடைப்பிடிக்கவோ முடியாது. அஹ்மதியா சமூகம் அவர்களின் நம்பிக்கையை வெறுமனே கடைப்பிடிப்பதற்காக அரசால் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில், பலவந்தமாக காணாமல் போனவர்கள் தொடர்பான பாகிஸ்தானின் விசாரணைக் கமிஷன் 8463 புகார்களைப் பெற்றுள்ளது. பலூச் மக்கள் இந்த கொடூரமான சுமைகளை சுமந்துள்ளனர். மாணவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் அரசால் தொடர்ந்து காணாமல் போகின்றனர். திரும்பி வாருவதே இல்லை" என்று சீமா பூஜானி கூறினார்.

நாட்டில் உள்ள கிறிஸ்தவர்களின் அவலநிலையையும், அவர்கள் எவ்வாறு தவறாக நடத்தப்படுகிறார்கள் என்பதையும் எடுத்துரைத்த பூஜானி, “ பாகிஸ்தான் கிறிஸ்தவ சமூகத்தை நடத்துவதும் மிக மோசமானது. அச்சமூகம் அடிக்கடி கொடூரமான தண்டனைச் சட்டங்கள் மூலம் குறிவைக்கப்படுகிறது. அரசு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக துப்புரவு வேலைகளை கிறிஸ்தவர்களுக்கு ஒதுக்குகின்றன. இந்து மற்றும் சீக்கிய சமூகங்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுகிறது. மேலும் அச்சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகளை கட்டாயமாக மாற்றுவது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். ராணுவத்தையோ நீதித்துறையையோ அவதூறு செய்பவர்களுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கும் மசோதா தற்போது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மேசையில் உள்ளது” என்று புஜானி கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in