வரலாற்றை நாம் மாற்றி எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது: அமித் ஷா உறுதி

அமித் ஷா
அமித் ஷா

வரலாறு திரிக்கப்பட்டதாக அடிக்கடி புகார்கள் வருகிறது, திரிபுகளற்ற வரலாற்றை நாம் மாற்றி எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அஹோம் ஜெனரல் லச்சித் பர்புகானின் 400வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அமித் ஷா, 30 பெரிய இந்தியப் பேரரசுகள் மற்றும் தாய்நாட்டிற்காகப் போராடிய முன்மாதிரியான 300 வீரர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து எழுதுமாறு கல்வியாளர்களை வலியுறுத்தினார்.

இது தொடர்பாக பேசிய அவர், “இதன் மூலம் இந்தியாவின் உண்மையான வரலாறு நிலைநாட்டப்படும், பொய்கள் தன்னிச்சையாக முடிவுக்கு வரும். இந்தியாவின் பெருமையை மேம்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியையும் ஆதரிக்கும் ஒரு அரசாங்கம் இப்போது எங்களிடம் உள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றை புதுப்பிக்க நாங்கள் பாடுபடுவோம்" என்று அவர் கூறினார்.

மேலும், “வீர் லச்சித் பர்புகான் அப்போது அசாமில் இல்லை என்றால், அசாமும், வடகிழக்கு பகுதிகளும் ஒருபோதும் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியிருக்காது. அவர்கள் அஹோமின் இறையாண்மை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வென்றதோடு மட்டுமல்லாமல், முழு தென்கிழக்கு ஆசியாவையும் மதவெறி கொண்ட படையெடுப்பாளர் ஔரங்கசீப்பிடமிருந்து காப்பாற்றினர். அக்பர், ஔரங்கசீப், குதுப் உத்-தின் ஐபக், இல்துமிஷ், பக்தியார் கல்ஜா, இவாஸ் காளி, முகமது பின் துக்ளக், மிர் ஜும்லா என அனைவரும் அசாமில் அஹோர் மன்னர்களிடம் தோல்வியை சந்தித்துள்ளனர்” என்றார்

தொடர்ந்து, லச்சித் பர்புகானின் வாழ்க்கை குறித்த இலக்கியப் படைப்புகளை இந்தி உட்பட 10 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்குமாறு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவிடம் அமித் ஷா கேட்டுக் கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in