தமிழகத்தில் இனி ரவுடிகள் ஆட்டம் போட முடியாது : கண்காணிக்க 'டிராக் கேடி' செயலி ரெடி

தமிழகத்தில் இனி ரவுடிகள் ஆட்டம் போட முடியாது :  கண்காணிக்க 'டிராக் கேடி' செயலி ரெடி

தமிழகம் முழுவதிலும் உள்ள ரவுடிகளின் விவரங்கள் அடங்கிய 'டிராக் கேடி' என்கிற செயலியை டிஜிபி சைலேந்திரபாபு அறிமுகப்படுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளின் சமூக விரோதச் செயல்களைக் கண்காணித்து தடுத்து நிறுத்தவும், அவர்களின் விவரங்கள் அதிகாரிகளின் விரல் நுனியில் இருக்கின்ற வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 39 மாவட்டங்கள் மற்றும் 9 கமிஷனரகங்களில் இருக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் இதர குற்றவாளிகளின் பட்டியல் புதிய செயலி மூலம் டிஜிட்டல் மயமாகி இருக்கிறது. இதன் மூலம் ரவுடிகளின் செயல்பாட்டை போலீஸார் எளிதில் கண்காணிக்க முடியும்.

'டிராக் கேடி' என்ற புதிய செயலி மூலம் தமிழக முழுவதிலும் உள்ள ரவுடிகளின் எண்ணிக்கை, அவர்களின் நன்னடத்தை ஆகியவற்றின் பிரிவின் கீழ் எத்தனை பேர் பிணைக்கப்பட்டுள்ளனர் போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகின்ற குற்றவாளிகளின் விவரங்களும் இந்த புதிய செயலியில் இடம் பெற்றுள்ளன.

அத்துடன் இந்த ரவுடிகள் செய்த குற்ற விவரங்களும் இதில் இருக்கின்றன. நன்னடத்தை பிணையில் இருப்பவர்கள் அதை மீறும் பட்சத்தில் அது தொடர்பான எச்சரிக்கை தகவலும் இதில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் மேற்பார்வையில் தென்சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா தலைமையிலான குழுவினர் இந்த செயலியை உருவாக்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in