முன்பதிவை ரத்து செய்தால் இனி அபராதம்: ஓலா, ஊபர் ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துதுறை எச்சரிக்கை

முன்பதிவை ரத்து செய்தால் இனி அபராதம்: ஓலா, ஊபர் ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துதுறை எச்சரிக்கை

பயணிகளின் முன்பதிவை ரத்து செய்தால் அபராதம் விதிக்கப்படும் என ஓலா, ஊபர் ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் ஓலா, ஊபர் சேவைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னையில் ஓலா, ஊபர் சேவைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அவசர தேவைகளுக்கு இந்த வாகன சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் மீது பயணிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதற்காக ஓலா, ஊபர் செயலியில் பயணிகள் முன்பதிவு செய்யும்போது தங்கள் வசதிக்கேற்ப ஓட்டுநர்கள் இந்த சேவையை பயன்படுத்துகின்றனர்.

அதே நேரத்தில் பயணிகளுக்கு தெரியாமலேயே முன்பதிவை ரத்து செய்துவிடுகின்றனர். இதனால் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனிடையே ஓலா, ஊபர் ஓட்டுநர்களுக்கு தமிழக போக்குவரத்துத்துறை செக் வைத்துள்ளது. பயணி ஒருவர் ஓலா, உபர் செயலியில் முன்பதிவு செய்யும்போது முன்பதிவை ஓட்டுநர்கள் ரத்து செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. ஆட்டோக்களுக்கு 50 ரூபாயும், கார்களுக்கு 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். மேலும் 18004255430 என்ற எண்ணில் பயணிகள் புகார் தெரிவிக்கலாம் என்று போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது. தமிழக போக்குவரத்து துறையின் இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in