கரோனாவில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு இனி வேலை கிடையாது: வீட்டுக்கு அனுப்பியது தமிழக அரசு

கரோனாவில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு இனி வேலை கிடையாது: வீட்டுக்கு அனுப்பியது தமிழக அரசு

கரோனா காலத்தில் பணியாற்றி வந்த ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனால் அவர்கள் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டில் பரவிய கரோனா தொற்றால் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் செவிலியர்களை 6 மாதத்திற்கு நியமித்தது தமிழக அரசு. அவர்களுக்கு மாதம் 14 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இதை கண்டித்து செவிலியர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து செவிலியர்களின் ஒப்பந்த காலத்தை தமிழக அரசு நீட்டித்தது. தொடர்ந்து நான்கு முறை செவிலியர்கள் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட செவிலியர்களின் பணி காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவு ஒப்பந்த செவிலியர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. கரோனா காலத்தில் ஒப்பந்த செவிலியர்கள் தங்கள் பணியை துணிச்சலுடன் செய்தனர். இந்த நிலையில் செவிலியர்களின் ஒப்பந்த காலம் முடிவடைந்ததால் அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்காமல் தமிழக அரசு வீட்டுக்கு அனுப்பி விட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in