`நீட் தேர்வெழுதும் கிராமப்புற மாணவர்களின் விவரம் இல்லை'

ஆர்டிஐ கேள்விக்கு தேசிய தேர்வு முகாமை அதிர்ச்சி பதில்
`நீட் தேர்வெழுதும் கிராமப்புற மாணவர்களின் விவரம் இல்லை'

"நீட் தேர்வெழுதும் கிராமப்புற மாணவர்களின் விவரங்கள் தங்களிடம் இல்லை" என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தேசிய தேர்வு முகாமை அதிர்ச்சி பதிலை அளித்துள்ளது.

நீட் தேர்வு என்பது தேசிய அளவில் மிக பெரிய விவாத பொருளாக இருந்து வருகிறது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் ஏழை எளிய மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு 2-வது முறையாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார்.

இந்நிலையில், கிராமப்புற மாணவர்கள் எவ்வளவு பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள், அதில் எவ்வளவு பேர் தேர்ச்சி பெறுகின்றனர் என்ற விவரங்கள் குறித்து தேசிய தேர்வுமுகாமையிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகள் முன் வைக்கப்பட்டன. அதற்கு தேசிய தேர்வு முகாமை அளித்துள்ள பதிலில், கிராமப்புற மாணவர்கள் குறித்து எந்த விவரங்களும் தங்களிடம் இல்லை. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கின்ற தேர்வெழுதுகின்ற மாணவர்களின் விவரங்கள் மாநில வாரியாக இல்லை என கூறியுள்ளது.

கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு முன் வைக்க கூடிய நிலையில் தேசிய தேர்வு முகாமை அளித்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in