
இன்று பல்வேறு செயலிகள் வாடகை கார் மற்றும் ஆட்டோ புக் செய்ய உள்ளன. இதில் சில ஆப்கள் ஒரே நேரத்தில் பல்வேறு பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்கின்றன. இதனை,ஷேரிங் அல்லது கார்பூலிங் என அழைக்கின்றனர். இதனால், பயணாளருக்கான செலவு குறையும் என்பதால், பலரும் இதற்கு ஒப்புக்கொள்கின்றனர்.
இதில் பயணம் செய்வோருக்கான பாதுகாப்பு வசதி குறைபாடு, சொந்த (வொயிட் போர்டு) வாகனங்களை, பலர் வாடகைக்கு பயன்படுத்துவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், அம்மாநில போக்குவரத்துத்துறை வாடகை வாகனத்தில் ஷேரிங் செய்ய தடை விதித்தது. மேலும், இந்த விதிமுறையை மீறுவோருக்கு தலா 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அரசின் இந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கூறி வாடகை வாகன ஓட்டுநர் மற்றும் வாடகை வாகன சங்கத்தினரும், பாஜக உள்ளிட்ட கட்சியினரும் வலியுறுத்தினர். இந்நிலையில், பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமலிங்கம் ரெட்டி, சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கார் ஷேரிங் தடை செய்யப்படவில்லை என்றும், அவற்றை தனியார் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்த வேண்டும் என்று மட்டுமே தெரிவித்திருந்ததாகவும் கூறினார். மேலும், இதுதொடர்பாக நாளை காலை அவர் தனியார் வாடகை வாகன செயலி நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...