தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

தூத்துக்குடி மாவட்ட மீனவர்களுக்கு மறு உத்தரவு வரும்வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தென்மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை கொடுத்திருந்தது. மட்டுமல்லாது, இன்று தமிழக கடலோரப் பகுதிகளிலும், மன்னார் வளைகுடாவிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், ஒரு சில பகுதிகளில் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசும் எனவும் எச்சரித்து இருந்தது.

இதேபோல் நாளை 8-ம் தேதி, மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்குப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடைஇடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் சில பகுதிகளிலும் காற்று வீசும் என எச்சரிக்கை விட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெல்ல, மெல்ல புயல் சின்னமாக மாறிவருகிறது. இதன் காரணமாக அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகி உள்ளது என்பதை விளக்கும்வகையில் தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in