3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்... மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷுக்கு மத்திய அமைச்சர் நோட்டீஸ்!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

தன்னைப் பற்றி தவறான, அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் எக்ஸ் வலைதளத்தில் மத்திய சாலை, போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசும் வீடியோ பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டனர். அதில் "கிராமங்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் இன்று அதிருப்தி அடைந்துள்ளனர். கிராமங்களில் சாலைகள், குடிநீர், நல்ல மருத்துவமனைகள், பள்ளிகள் இல்லை-நிதின் கட்கரி" என்ற வாசங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் தன்னைப் பற்றி காங்கிரஸ் தலைவர்கள் தவறான, அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக கூறி, மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கு நிதின் கட்கரி தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ்
மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ்

இது தொடர்பாக நிதின் கட்கரியின் வழக்கறிஞர் பலேண்டு சேகர் கூறுகையில், "ஒரு செய்தி நிறுவனத்துக்கு அமைச்சர் நேர்காணல் அளித்திருந்தார். அதிலிருந்து காட்சிகளை வெட்டி எடுத்து, வேறு ஒரு வீடியோவை எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் அமைச்சர் தொடர்பான 19 விநாடி காட்சி வருகிறது. அதில் அமைச்சர் கூறி கருத்துகளின் உண்மையான சூழல், நோக்கத்தை மாற்றப்பட்டுள்ளது. இதனை அறிந்த அமைச்சர் கவலையடைந்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எக்ஸ் தளத்திலிருந்து அந்த வீடியோவை அகற்றவும், 3 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், நிதின் கட்கரி வழக்கறிஞர் அனுப்பியுள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இப்படியெல்லாம் வாக்கு சேகரிக்கக்கூடாது... அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

பெங்களூரு ஓட்டலில் டைமர் வெடிகுண்டு வெடிப்பில் தீவிரவாத சதியா?... என்ஐஏ தீவிர விசாரணை!

கோடிக் கணக்கான இளைஞர்களுக்கு அநீதி இழைக்காதீர்கள்... சு.வெங்கடேசன் எம்.பி கொந்தளிப்பு!

4+1 வேண்டும்... பிரேமலதா பிடிவாதம்: அதிமுக- தேமுதிக கூட்டணி நிலவரம்!

சரசரவென குறைந்த பூண்டு விலை...இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in