இந்தியாவில் நித்யானந்தா துன்புறுத்தப்படுகிறார்: ஐ.நா சபையில் பொங்கிய விஜயப்ரியா

விஜயப்ரியா  நித்யானந்தா
விஜயப்ரியா நித்யானந்தா இந்தியாவில் நித்யானந்தா துன்புறுத்தப்படுகிறார்: ஐ.நா சபையில் பொங்கிய விஜயப்ரியா

இந்தியாவில் இந்து விரோத சக்திகளால் நித்யானந்தா துன்புறுத்தப்படுவதாக ஐ.நா சபையில் கைலாசாவின் பிரதிநிதி விஜயப்ரியா நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா
நித்யானந்தாஇந்தியாவில் நித்யானந்தா துன்புறுத்தப்படுகிறார்: ஐ.நா சபையில் பொங்கிய விஜயப்ரியா

பாலியல் மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகள் உள்ள நித்யானந்தா, இந்திய காவல்துறையிடம் இருந்து 2019-ம் ஆண்டு முதல் தலைமறைவாகி உள்ளார். இந்த நிலையில் மத்திய அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் கைலாசா என்ற தீவை அவர் அமைத்ததாக கூறப்படுகிறது.

அவ்வப்போது சமூக வலைதளங்களில் மூலம் தன்னை நித்யானந்தா வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். கைலாசா சார்பில் திருச்சி சூர்யா உள்ளிட்ட பல அரசியல்வாதிகளுக்கு விருதுகளையும் நித்யானந்தா வழங்கியுள்ளார். ஆனால், அவரை போலீஸார் தேடி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 19-வது பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மாநாட்டில் நித்யானந்தாவின் கைலாசாவின் பிரதிநிதியாக விஜயப்ரியா நித்யானந்தா பங்கேற்றார்.

இக்கூட்டத்தில் அவர் பேசுகையில், " நித்யானந்தா அவர் பிறந்த ஊரில் சில இந்து விரோதிகளால் துன்புறுத்தப்படுகிறார். அமெரிக்கா மற்றும் இந்தியாவை கைலாசா உயர்வாகக் கருதுகிறது. அத்துடன் இந்தியாவை தனது குருபீடமாக மதிக்கிறது. எங்கள் கவலை அந்த இந்து விரோத சக்திகளை நோக்கி மட்டுமே உள்ளது. இந்து மதம் மற்றும் கைலாசத்தின் உயர் பீடாதிபதிக்கு எதிராக தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் இத்தகைய சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in